இன்று 12 மணிநேர நீர்வெட்டு

இன்று 12 மணிநேர நீர்வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு இன்று(09) காலை 8 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையான 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, வாத்துவை, வஸ்கமுவ, பொதுபிட்டிய, களுத்துறை (வடக்கு/தெற்கு), கட்டுகுருந்த, நாகொடை, பயாகல, பிலமினாவத்த, போம்புவல, மக்கொன, பேருவளை, கலுவாமோதர, மொரகல்ல, அளுத்கம, தர்கா நகர் மற்றும் பென்தோட்டை ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.