தலைமையில் இருந்து மைத்திரி இராஜினாமா

தலைமையில் இருந்து மைத்திரி இராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான கருத்து முரண்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாகவும், தேர்தல் முடியும் வரை பேராசிரியர் ரோஹண லக்‌ஷமன் பியதாச தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி தேர்தல் பிரச்சார பணிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒதுங்கியிருப்பாரெனவும் அரசியல் வட்டார உள்ளக செய்திகள் தெரிவிக்கின்ற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலுக்கு கோட்டாபய ராஜபக்ஷ பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் இன்றைய தினம் தெரிவித்திருந்தார்.