ஜனாதிபதி தேர்தல் தொடர்பான 10 சுவாரஸ்யமான தகவல்கள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான 10 சுவாரஸ்யமான தகவல்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத் தாக்கலும் நிறைவடைந்துள்ளது.

கடந்த 7 ஜனாதிபதித் தேர்தல்களையும் விட இந்த முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முற்றிலும் மாறுப்பட்ட, பலரும் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் பதிவாகியுள்ள ஒரு தேர்தலாக மாற்றம் பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான 10 முக்கிய விடயங்கள்.

1. ஆட்சியிலுள்ள ஜனாதிபதியொருவர், ஆட்சியிலுள்ள பிரதமர் மற்றும் பதவியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடாத ஒரு ஜனாதிபதித் தேர்தல் இது.

2. இலங்கை வரலாற்றில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (35 வேட்பாளர்கள்)

3. அதிகளவிலான வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்த ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (41 வேட்பு மனுக்கள்)

4. அதிநீளமான வாக்குச்சீட்டை கொண்ட ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகின்றது. (2 அடி நீளத்தை விடவும் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது)

5. இலங்கை வரலாற்றில் அதிக செலவீனத்தை கொண்ட ஜனாதிபதி தேர்தல் இதுவாகும் (400 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை செலவிடப்படவுள்ளது)

6.வாக்குபெட்டிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன.
7.20 ஆண்டுகளுக்கு பின்னர் முதற்தடவையாக பெண்ணொருவர் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். (1999ஆம் ஆண்டு தேர்தலில் இறுதியாக பெண்கள் போட்டியிட்டிருந்தனர்)

8.போட்டியிடும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும். (சுப்ரமணியம் குணரத்னம்)

9.ஜனாதிபதி ஆட்சியிலுள்ள பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிடாத முதலாவது ஜனாதிபதி தேர்தல்.

10.சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்ட நிலையில், ஆணைக்குழுவின் கீழ் நடத்தப்படும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல். (இதற்கு முன்னர் தேர்தல் திணைக்களத்தின் கீழ் தேர்தல்கள் நடத்தப்பட்டன.)