கோட்டாபயவிற்கு ஆதரவு வழங்க சந்திரிக்கா மறுப்பு?

கோட்டாபயவிற்கு ஆதரவு வழங்க சந்திரிக்கா மறுப்பு?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று உறுத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எனினும் இந்தத் தீர்மானத்திற்கு சந்திரிக்கா மற்றும் அவரது ஆதரவு குழுவினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் தீர்மானம் குறித்து கடும் அதிர்ச்சியடைந்துள்ள சந்திரிக்கா, பிரித்தானியா செல்வுள்ளதாக தெரிய வருகிறது.

இந்நிலைமையில் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.