மேலும் 5 யானைகள் விழுந்து உயிரிழப்பு

மேலும் 5 யானைகள் விழுந்து உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த சனிக்கிழமை, தாய்லாந்தில் அருவி ஒன்றிலிருந்து விழுந்து குட்டியானை உட்பட மொத்தம் 6 யானைகள் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்ற அதே இடத்தில் மேலும் 5 யானைகள் விழுந்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தில் காவோ யாய் தேசிய பூங்கா உள்ளது. பெரும் காடான இங்கு யானைகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்தப் பூங்காவிற்குள் ஹயூ நரோக் என்ற அருவி உள்ளது.

இந்த வனச் சரணாலயத்தை தாய்லாந்து வனத்துறை மற்றும் வனவிலங்கு காப்பகம் பராமரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை யானைகள் அருவியின் பள்ளத்தில் விழுந்ததை கண்ட அதிகாரிகள் நீண்ட போராட்டத்துக்குப் பின், பாறைகளுக்கு இடையே சிக்கி இருந்த இரு யானைகளை மீட்டபோது அதில் 6 யானைகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டன.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாணைகள் இடம்பெற்ற நிலையில் அந்ந அருவியின் உச்சியில் இருந்து மேலும் கீழே விழுந்தது 5 யானைகள் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதுவே ஒரு சம்பவத்தில் அதிக யானைகள் உயிரிழந்தமை பதிவாகியுள்ளது. இவ்வாறு 11 யானைகளும் சுமார் 656 அடி உயரமான நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.