இளஞ்சிவப்பு நிறத்தினால் அலங்கரிக்கப்படும் காடபி மைதானம்

இளஞ்சிவப்பு நிறத்தினால் அலங்கரிக்கப்படும் காடபி மைதானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நிகழ்வுகளும் இதன்போது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி இப் போட்டி இடம்பெறும் லாகூரிலுள்ள காடபி கிரிக்கெட் மைதானமானது இளஞ்சிவப்பு நிறத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப் போட்டியில் கலந்துகொள்ளும் இரு அணி வீரர்களும் கையில் இளம்சிவப்பு நிறத்திலான பட்டிகளை கட்டி மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளையாடவுள்ளனர்.

இதேவேளை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகமானது போட்டியைக் காணவரும் ரசிகர்களை இளஞ்சிவப்பு நிற உடை அணியுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.