சஜித்தின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று

சஜித்தின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் இன்று(10) நடைபெறவுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்றைய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும் காலி முகத்திடலின் எந்தப் பகுதியிலிருந்தும் கூட்டத்தைக் கண்டுகளிப்பதற்கான நவீன வசதிகள் செய்யப்பப்பட்டுள்ளதாகக் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.