வாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டினை அச்சிடும் நடவடிக்கைகள் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் ஆரம்பமாகியுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே கூறியுள்ளார்.

மாவட்ட மட்டத்தில் வாக்குச்சீட்டு அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 35 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதுடன், இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் வாக்குச்சீட்டின் நீளம் 26 அங்குலமாக அமையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)