பாதுகாப்பு வழங்குமாறு மகேஷ் சேனாநாயக கோரிக்கை

பாதுகாப்பு வழங்குமாறு மகேஷ் சேனாநாயக கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனது பாதுகாப்பினை பலப்படுத்தக் கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு ஒன்றினை கையளிக்கவுள்ளதாக தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளார் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார்.

சில அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலரின் கருத்துக்கள் தனது பாதுகாப்பிற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்றைய தினம் (10) தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அது தொடர்பில் முறையிட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.