உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 64 பேரினதும் விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 64 பேரினதும் விளக்கமறியல் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல், இம்மாதம் 24ஆம் திகதி வரையில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் இன்று(10) உத்தரவிட்டுள்ளார்.

நுவரேலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் தலைமைகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி சந்தேகநபர்களில் 04 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.