ஜப்பானுக்கான விமான சேவையில் தாமதம்

ஜப்பானுக்கான விமான சேவையில் தாமதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜப்பானில் ஏற்பட்டுள்ள ஹகிபிஸ் சூறாவளி காரணமாக ஶ்ரீ லங்கன் விமான சேவையின் ஜப்பான், நரிடாவுக்கான விமான சேவை தாமதமாக இடம்பெறவுள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று இரவு ஜப்பான் நோக்கி செல்லவுள்ள யூ.எல்.460 ரக விமானம் நாளை அதிகாலை 2.15 மணியளவில் தாமதமாக புறப்பட்டுச் செல்லவுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

விமான சேவை தொடர்பான மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள 0117771979 என்ற இலக்கத்துக்கு அழைத்து அல்லது ஶ்ரீலங்கன் விமான சேவையின் இணைத்தளத்திற்கு பிரவேசித்து பெற்றுக் கொள்ள முடியும் என ஶ்ரீ லங்கன் விமான சேவை குறிப்பிட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)