மாலிங்க ஓய்வு – T-20 தலைவர் தசுன் ஷானக்க

மாலிங்க ஓய்வு – T-20 தலைவர் தசுன் ஷானக்க

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச இருபதுக்கு- 20 தொடரிலிருந்து லசித் மாலிங்க ஓய்வு பெற்றால் அவருடைய இடத்துக்கு நிரோஷன் டிக்வெல்ல அல்லது தசுன் ஷானக்கவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்படும் என இலங்கை தேர்வுக் குழுவின் தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு -20 தொடரில் தசுன் ஷானக்க அணியை சிறந்த முறையில் வழிநடத்தினார். இதனால் அவரை இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு -20 அணியின் உப தலைவராக நியமிக்க வேண்டும் எனக் கூறுவது சாதாரணம் இல்லை என இலங்கை தேர்வுக் குழுவின் தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

தசுன் ஷானக்க எதிர்வரும் காலங்களில் 6ஆவது அல்லது 7ஆவது இலக்கத்தில் களமிறங்கி தொடர்ந்து தனது திறமையினை வெளிப்படுத்தினால் அவருக்கு தலைவர் பதவி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இருபதுக்கு -20 அணியின் தலைவராக லசித் மாலிங்க ஓய்வு பெற்றால் அப்போது இலங்கை இருபதுக்கு -20 அணியின் தலைவர் மற்றும் உப தலைவர் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிரோஷன் டிக்வெல்லவை உப தலைவர் பதவியில் இருந்து நீக்குவது பொருத்தமில்லை. அண்மையில் இடம்பெற்ற நியூசிலாந்து அணியுடனான தொடரில் உப தலைவரக சிறப்பாக செயற்பட்டார். எனவே, அவரிடமும் தலைவருக்கான அனைத்து தகுதியும் உண்டு என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று(09) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.