சுற்றுலாத்துறையின் மூலம் 238 கோடி டொலர் வருமானம்

சுற்றுலாத்துறையின் மூலம் 238 கோடி டொலர் வருமானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 8 மாத காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் மூலம் 238 கோடி அமெரிக்க டொலர் வருமானமாக பெறப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 27 கோடி அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் வீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்பொழுது படிப்படியாக வழமை நிலைக்கு திரும்பி வருகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாத்தில் 143,587 சுற்றலாப்பயணிகள் வருகை தந்துள்ளதுடன், கடந்த ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இத் தொகை 24.1 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.