சீரற்ற காலநிலை – நீர்மட்டம் உயர்வு

சீரற்ற காலநிலை – நீர்மட்டம் உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் மழையுடனான வானிலையால் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனி கங்கை, நாகலகம் வீதி ஹங்வெல்ல கலேன்கோஸ் பிரதேசங்கள் மற்றும் அத்தனகலு ஒய துன்னமலே பிரதேசத்தில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தப்போவ, அங்கமுவ, இராஜாங்கனை, தெதருஓயா மற்றும் குக்குளே கங்க ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், குறித்த நீர்த்தேக்கங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறும் வௌியேற்றப்படும் நீரை பயன்படுத்தும் போதும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.