உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் – இறுதி அறிக்கை நாளை பாராளுமன்றுக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இறுதி அறிக்கை நாளை பாராளுமன்றுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கப்பட உள்ளதாகவும் குறித்த குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்திருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை அடுத்து கடந்த மே மாதம் 22ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவினால் குறித்த விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.