மகேஷ் சேனாநாயக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதி

மகேஷ் சேனாநாயக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் இராணுவ தளபதி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக இன்று(22) மதியம் திடீர் சுகயீனம் காரணமாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெறவிருந்த தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே அவர் திடீரென சுகயீனமுற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.