பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50-75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வங்காள விரிகுடா கடற்பரப்பில் விருத்தியடைந்த “Bulbul” என்ற மிகக் கடும் சூறாவளியானது வட அகலாங்கு 20.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.6E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்றிரவு மேற்கு வங்காளம் (இந்தியா) – பங்களாதேஷ் கரையை கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் (குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள்) நவம்பர் 11 ஆம் திகதி வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.