வாக்காளர் அட்டை விநியோகம் நேற்றுடன் நிறைவு

வாக்காளர் அட்டை விநியோகம் நேற்றுடன் நிறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வாக்காளர் அட்டைகள் கிடைக்காதோர் அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று அவற்றை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.