சுமார் 800 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

சுமார் 800 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த வாரம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை நடவடிக்கயில் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த சுமார் 800 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் 60 000 இற்கும் அதிக பகுதிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும் இவற்றில் 30 வீதமான பகுதிகள், நுளம்புகள் பெரும் வகையில் இருந்தமை கண்டறியப்பட்டதாக டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 65 000 இற்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.