கதிர்காம துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கதிர்காம துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கதிர்காமம் பொலிஸ் பிரிவின் தனமல்வில வீதியின் செல்ல கதிர்காமம் பிரதேசத்தில் இருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கி மற்றும் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.