மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலையகப் பகுதிகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியலின், கோவா ஒரு கிலோகிராம் 130 ரூபாவாகவும் கரட் ஒரு கிலோகிராம் 200 ரூபாவாகவும் லீக்ஸ் ஒரு கிலோகிராம் 200 ரூபாவாகவும் காணப்படுகிறது

மேலும், உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 140 ரூபாவாகவும் சலாது ஒரு கிலோகிராம் 250 ரூபாவாகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.