கொழும்பு பள்ளிவாயலில் ரணிலுக்கு விஷேட பிராத்தனை

கொழும்பு பள்ளிவாயலில் ரணிலுக்கு விஷேட பிராத்தனை

மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியின் ஏற்பாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட பிரார்த்தனை நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.

இன்று(25) காலை இந்த வைபவம் இடம்பெற்றிருந்தது.

பிரதமரின் வெற்றியை அடுத்து அமையவிருக்கும் அரசாங்கத்தின் சிறப்பான செயற்பாடுகளுக்கும், நாட்டின் நலனுக்காகவும் இதன் போது விசேட பிரார்த்தனை (துஆ) நடத்தப்பட்டது.

இந்த பிரார்த்தனை வைபவத்தில் கலந்து கொண்ட பிரதமர், தனது வெற்றிக்கு பாரிய பங்களித்த கொழும்பு முஸ்லிம்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

வைபவத்தில் பிரதமருடன் கொழும்பிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார், கொழும்பு மாநகர மேயர் முஸம்மில், மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், விசேட துஆ பிரார்த்தனையை மௌலவி அப்துல் ஹமீத் பஹ்ஜி நடத்தி வைத்தார்.

ranil-1 ranil-2

(riz)