பண்டிகைக் காலத்திற்கு தேவையான அளவு பொருட்கள் இறக்குமதி

பண்டிகைக் காலத்திற்கு தேவையான அளவு பொருட்கள் இறக்குமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கு தேவையான போதுமான அளவு பொருட்கள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டிருப்பதனால் பொருட்களின் பெறுமதியை குறைந்த விலையில் பேண முடியும் என இறக்குமதி வர்த்தக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

150 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டுவந்த பெரிய வெங்காயத்தின் விலை 125.00 ரூபாவாக குறைவடைந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.