சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் விளக்கமறியல் நீடிப்பு

சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் விளக்கமறியல் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சகரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சிலாபம், முன்னேஸ்வரத்திலுள்ள ஆலயமொன்றில் உரிமையாளரிடம் இலஞ்சம் பெற முயற்சித்த வேளையிலேயே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.