38 பேருடன் சென்ற சிலி நாட்டு விமானம் மாயம்

38 பேருடன் சென்ற சிலி நாட்டு விமானம் மாயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு 38 பேருடன் பயணித்த இராணுவ விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தாட்டிக்கா நோக்கிப் பயணித்த வழியிலேயே இது காணாமற்போயுள்ளதாக சிலி விமானப்படை அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளது.

காணாமற்போன விமானத்தையும் அதில் பயணித்தவர்களையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிலி நாட்டு விமானப்படை அறிவித்துள்ளது.