தேவையற்ற வேட்பாளர்கள் தொடர்பில் நடவடிக்கை

தேவையற்ற வேட்பாளர்கள் தொடர்பில் நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -தேர்தல்களில் தேவையற்ற வேட்பாளர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க பாராளுமன்றத்தினால் அதனுடன் தொடர்புடைய சட்டம் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அனைத்து தேர்தல்களிலும் தேவையற்ற வகையில் களமிறங்கும் வேட்பாளர்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

தேர்தல்களின் போது ஏனைய நபர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்குடன் வேட்பாளர்கள் களமிறங்குவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட ​வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.