மீன் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு

மீன் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மீன் இறக்குமதி மீதான வரியை அதிகரிக்க வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை துணைக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் மீன் இறக்குமதி மீதான வரி ஒரு கிலோ கிராமிற்கு ரூ .100 ஆக இருந்த நிலையில் கடந்த ஆட்சியில் ஒரு கிலோ கிராமிற்கான வரி 25 ரூபாவாக குறைக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக மீன் இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக உள்நாட்டு மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், குறித்த இறக்குமதி வரியை ஒரு கிலோவுக்கு ரூ .100 வரை உயர்த்த வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை துணைக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.