Huawei 2020ம் ஆண்டில் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவுள்ளது

Huawei 2020ம் ஆண்டில் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவுள்ளது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகின் முன்னணி தகவல் மற்றும் தொடர்பாடல்கள் தொழில்நுட்ப வழங்குனரான Huawei, அதன் அதி நவீன தொழில்நுட்பத்தை பல வகையான அணியும் தொழில்நுட்பங்கள் (wearable) ஊடாக உங்களுக்கு பரிமாற்றம் செய்கின்றது. சீனாவை தளமாகக் கொண்ட இந்நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட் கடிகாரங்கள் மற்றும் நேர்த்தியான சிறப்பம்சங்கள் பல நிறைந்த கைப்பட்டைகள் (bands) ஆகியவற்றை உருவாக்குகின்றது. Huawei தனது அணியும் தொழில்நுட்ப சாதனங்கள் வரிசையில் 4 புதிய தயாரிப்புகளை 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளது: : Huawei Watch GT2, FreeBuds 3, Huawei Band 4 மற்றும் Huawei Band 4e. Huawei Devices Sri Lankaவின் இலங்கைக்கான தலைவர் பீட்டர் லியூ, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “2020 ஆம் ஆண்டு இலங்கையில் புதிய Huawei அணியும் தொழில்நுட்ப சாதனங்களின் தயாரிப்பு வரிசையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். 2019 ஆம் ஆண்டு Huaweiக்கு உற்சாகமானதாக அமைந்துள்ளதுடன், அடுத்த ஆண்டு நமக்குக் கொண்டு வரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பில் நாம் ஆவலாக உள்ளோம்.

அழகியல் ரசனை மற்றும் செயற்பாடுகள் என இரண்டினையும் உள்ளடக்கியுள்ள Huawei அணியும் தொழில்நுட்ப சாதனங்கள், அதன் தொழில்நுட்ப மற்றும் காட்சி திறன்களுடன் நேர்த்தியையும், மேன்மையையும் வெளிப்படுத்துகின்றன. இலங்கைக்கு சிறந்த தொழில்நுட்பங்களை வழங்க நாங்கள் எப்போதுமே முயற்சி செய்துள்ளோம், மேலும் அடுத்த ஆண்டு நமது இலங்கை ரசிகர் பட்டாளத்தின் மூலம் இந்த அணியக்கூடிய தொழில்நுட்ப சாதனங்கள் பெறும் வரவேற்பைப் பார்க்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம்,” என்றார். தனிச்சிறப்பு வாய்ந்த திறன்களுக்கு நன்கறியப்பட்ட நவீன Huawei Watch GT2 அப்டேட்டானது ஆச்சர்யமூட்டும் புதிய சிறப்பம்சங்கள் பலவற்றைக் கொண்டு வருகின்றது.

அழைப்பு மற்றும் அறிவிப்பு ஒலியளவைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஒலி கட்டுப்பாடுகள் அமைப்பானது மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் raise-to-wake மற்றும் இதயத் துடிப்பு கண்காணிப்பு உணர்திறன் ஆகியவையும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த 46mm கடிகாரமானது, 454 X 454 தெளிவுத் திறன்கொண்ட, 1.39 அங்குல AMOLED திரையைக் கொண்டதுடன், இதன் பிரகாசம் 1,000 நிட்ஸ்களாகும். Watch GT2 ஆனது Huawei இன் சொந்த தயாரிப்பான Kirin A1 chipset இனால் வலுவூட்டப்படுவதுடன், விவேகமான சக்தி சேமிப்பு தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. இது 2GB RAM மற்றும் 4GB நினைவகத்தையும் கொண்டதுடன், இதில் 2.2GB பயன்படுத்தக் கூடியது, இதில் சுமார் 500 பாடல்களை சேமித்து வைக்கமுடியுமென்பதுடன், புளூடூத் மூலம் யாருக்கும் தடையின்றி அழைப்பை மேற்கொள்ளும் ஆற்றலையும் கொண்டது. Huawei Watch GT2 அண்ட்ரோய்ட் 4.4 அல்லது அதற்கு மேல் மற்றும் IOS 9.0 அல்லது அதற்கு மேல் உள்ள இயங்குதளங்களுக்கு ஏற்றது.

Huawei’s Freebuds 3 உலகின் முதல் first open-fit active noise-cancellation புளூடூத் இயர்ஃபோன் (earphones) என்பதால் வெவ்வேறு வகையான செவிக்குழல் வடிவங்களுக்கு பொருத்தமாகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வட்டமான வடிவமைப்பு மற்றும் ஒவ்வொன்றும் 4.5 கிராம் எடையுடன், அவை நீண்ட காலத்திற்கு பயன்படுத்த வசதியாகவும் இருக்கும். Huawei இன் விவேகமான active noise-cancellation வசதியை இடதுபக்க earbudஐ இரு தடவை தட்டுவதன் மூலம் இலகுவாக செயல்படுத்தப்பட முடியும். Huawei, Freebuds 3 இல் Bone Voice ID என்ற சிறப்பம்சமானது பாவனையாளர்கள் அழைப்புகளை மேற்கொள்ளும் போது மிகவும் உதவியாக அமையும். இந்த தொழில்நுட்பம் உங்கள் வாயின் அசைவுகளின் அதிர்வுகளை எடுத்து, அதன் மூலம் அழைப்பின் போது பயனரின் குரலையும், பின்னணி இரைச்சலையும் வேறுபடுத்த உதவுகிறது. இந்த தகவலைப் பயன்படுத்தி Freebuds 3 தானாக சுற்றுப்புற சத்தத்தைக் குறைக்கிறது, மேலும் உங்கள் அழைப்புகளை அதிக ஒலி தரத்துடன் அனுபவிக்க உதவுகிறது.

Huawei Band 4 மற்றும் Huawei Band 4, 0.5 அங்குல இடைவெளியில் அமைந்த 48×88 பிக்ஸல்ஸ் தெளிவுத் திறன்கொண்ட PMOLED வர்ணத் திரையைக் கொண்டுள்ளன. 50 மீட்டர் வரையான நீர் எதிர்ப்பு அம்சத்துடன், வியர்வைமிக்க உடற்பயிற்சிகளிலும், நீர்ச்சறுக்கு அல்லது நீச்சலின் போதும் பாவனையாளர்களுக்கு Huawei Band 4/4e சிறந்த துணையாக அமைகின்றது. Huawei Band 4/4e பல்வேறு வகையான மொபைல் போன்களில் செயற்படக்கூடிய நடை எண்ணிக்கை, தூக்க கண்காணிப்பு, செயற்படாதிருத்தல் தொடர்பான நினைவூட்டல்கள் மற்றும் தகவல் எச்சரிப்பு போன்ற செயற்பாடுகளைக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வித்தியாசம் என்னவெனில், Huawei Band 4e Basketball Wizard வெளியீடானது, கூடைப்பந்து விளையாட்டின் போது மிகுந்த பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதன் உடற்பயிற்சி அலகுகள் குறிப்பாக கண்காணிக்கப்படுவதுடன், Huawei Band 4 மற்றும் Huawei Band 4e ஆகிய இரண்டும் மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பங்களிப்பு செய்யும் தீவிர உடற்பயிற்சி கண்காணிப்பாளராக செயற்படுகின்றன.

2019 ஆம் ஆண்டில், BrandZ இன் உலகின் பெறுமதி வாய்ந்த உலகளாவிய வர்த்தகநாமங்கள் 100 இன் பட்டியலில் Huawei 47 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், Forbes சஞ்சிகையின் உலகின் பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமங்களின் பட்டியலில் 79 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. இதனோடு, Brand Finance இன் மிகவும் பெறுமதி வாய்ந்த உலகளாவிய 500 நிறுவனங்களைக் கொண்ட பட்டியலில் 25 ஆவது இடத்தை தனதாக்கிக் கொண்டது. Interbrandஇன் உலகளாவிய வர்த்தக நாமங்கள் கொண்ட பட்டியலில் 68 ஆவது இடத்தை Huawei பெற்றுக்கொண்டது. மேலும், Fortune’s Global 500 பட்டியலில் 61 ஆவது இடத்தையும் Huawei தனதாக்கியுள்ளது.