16 வயது  மாணவியை காணவில்லை

16 வயது மாணவியை காணவில்லை

பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மத்தியப்பிரிவைச் சேர்ந்த 16 வயது மதிக்கதக்க தவராஜ் சர்மிளா என்ற பாடசாலை மாணவியை கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என்று மாணவியின் தந்தை பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த மாணவி கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னார் கெர்க்கஸ்வோல்ட் இல 2 தமிழ் வித்தியாலய மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறி சென்ற மாணவி இதுவரை வீடு திரும்பவில்லை என மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

மாணவி காணமல் போனது தொடர்பில் இதுவரையில் மூன்று நபர்களிடம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி காணாமல் போனதை அடுத்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருப்பதாகவும் குறித்த சிறுமி குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணமால் போன மாணவி தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அருகாமையில் இருக்கும் பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்குமாறு பொகவந்தலாவ பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்