பெண்களின் பின்புறம் ஊசியால் குத்தும் மர்ம மனிதன்

பெண்களின் பின்புறம் ஊசியால் குத்தும் மர்ம மனிதன்

தனியாக வரும் பெண்களை கண்டால் தனது கையில் உள்ள ஊசியால் பின்புறம் குத்தி விட்டு மின்னல் வேகத்தில் மறைந்து விடும் மர்ம மனிதனால் பெண்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்த மர்ம மனிதனின் செயல், ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 5 நாட்களாக அந்தப் பகுதிகளில் நடந்து வருகிறது.

மோட்டார் சைக்கிளில் பச்சை முகமூடி அணிந்து இந்த மர்ம மனிதனினால் இதுவரை 20 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கபட்டு உள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட 6 பெண்கள் பீமாவரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மர்ம வாலிபரின் ஊசி தாக்கு தலுக்குட்பட்ட 19 பெண்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த மர்ம மனிதனைப் பிடிப்பதற்காக பொலிஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.