அபசரனை… என்ற வார்த்தையை கூறிய ஞானசார தேரருக்கெதிராக என்ன நடவடிக்கை?

அபசரனை… என்ற வார்த்தையை கூறிய ஞானசார தேரருக்கெதிராக என்ன நடவடிக்கை?

சட்டத்தரணி சிராஸ் மன்றில் கேள்வி
முஸ்லிம் இளை­ஞ­ரொ­ருவர் சிங்­கள யுவ­தி­யொ­ரு­வ­ருக்கு ‘அப­ச­ரனை’ என்ற வார்த்­தையை பிர­யோ­கித்தார் என்று குற்றம் சுமத்தி இந்த வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

ஆனால் அளுத்­க­மையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளுக்கு கார­ண­மாக இருந்த பொது­பல சேனாவின் ஞான­சார தேரர் பாணந்­து­றையி­லி­ருந்து அளுத்­கம வரை­யி­லான நூற்­றுக்கு மேற்­பட்ட முஸ்லிம் கடை­க­ளுக்கு ‘அப­ச­ரனை’ என்றார்.

ஆனால் அவ­ருக்கு எதி­ராக எவ்­வித சட்ட நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை என களுத்­துறை நீதிவான் நீதி­மன்றில் பிர­தி­வா­தியின் சார்பில் ஆஜ­ரான RRT அமைப்பின் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் நீதி­வா­னிடம் தெரி­வித்தார்.

அளுத்­கம வன்­மு­றைகள் தொடர்­பாக முஸ்­லிம்­களால் களுத்­துறை நீதவான் நீதி­மன்றில் 54 முறை­ப்பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­ததும் இது­வரை எவ்­வித சட்ட நட­வ­டிக்கையும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

அளுத்­க­மவில் முஸ்லிம் இளை­ஞ­ரொ­ருவர் பெரும்­பான்மை இனத்தை சேர்ந்த யுவதி ஒரு­வ­ருக்கு ‘அப­ச­ரனை’ என்ற வார்த்­தையைப் பிர­யோ­கித்­த­மைக்கு எதி­ராக அளுத்­கம பொலி­ஸா­ரினால் களுத்­துறை நீதவான் நீதி­மன்றில் தொட­ரப்­பட்­டி­ருந்த வழக்கு விசா­ரணை நேற்று இடம் பெற்­றது.

இவ்­வி­சா­ர­ணையின் போதே சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் மேற்­கு­றிப்­பிட்ட கருத்­துக்­களைத் தெரி­வித்தார்.

அளுத்­கம பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்ட முஸ்லிம் இளைஞர் பொலிஸார் பாது­காப்­பி­லி­ருந்த போது  பத்­தி­ராஜ கொட பன்­ச­லைக்கு அழைத்து செல்­லப்­பட்டு குரு­மா­ரினால் தாக்கி சித்­தி­ர­வதை செய்­யப்­பட்ட பின்பே நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

பொலிஸார் பாது­காப்பில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஒருவர் அழைத்துச் செல்­லப்­பட்டு மூன்றாம் தரப்­பி­னரால் தாக்கிச் சித்­தி­ர­வதை  செய்­யப்­பட்­டுள்­ளமை சட்­டத்தை மீறிய செயல் என்­பதை சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் எடுத்­து­ரைத்தார்.

களுத்­துறை நீதிவான் நீதி­மன்றின் நீதி­பதி ஜனாபா ஆப்தீன் மேல­திக விசா­ர­ணையை எதிர்­வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்தார்.

இதே­வேளை அளுத்­கமை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு எதி­ராக RRT அமைப்­பினால் உயர்­நீ­தி­மன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

களுத்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணையின் போது RRT அமைப்பின் சட்டத்தரணி சப்ராஸ் ஹம்சாவும் ஆஜராகியிருந்தார்.

(ARA.Fareel)