நிலா காய்கிறது : 4,125 கோடி..!!!!!!!!! நிலாவுக்கு செல்ல ஒரு நபருக்கான கட்டணம்..!! – யம்மாடியோவ்

நிலா காய்கிறது : 4,125 கோடி..!!!!!!!!! நிலாவுக்கு செல்ல ஒரு நபருக்கான கட்டணம்..!! – யம்மாடியோவ்

நிலவுக்கு மனிதர்களை ஜாலி சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை விரைவில் தொடங்கவிருக்கிறது ஒரு அமெரிக்க நிறுவனம். கட்டணம் வெறும் ரூ 8,250 கோடிதான்! 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன் முதலில் நிலாவில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்டிராங்க். நிலவுக்கு மனிதன் சென்று வந்த பின்புதான் அங்கே மனிதன் குடியேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தது. அதன் பிறகு, குடியேற வேண்டாம், சும்மா ஜாலியாக சுற்றி வரலாம் என்று திட்டம் போட்டார்கள்.

அதன் தொடர்ச்சியாக பல ஆய்வுகளை செய்தபின் இப்போதுதான் அதற்கான முழு வடிவம் கிடைத்திருக்கிறது. மக்களுக்கும் நிலாவை சுற்றிப் பார்க்கும் ஆர்வம் குறையவில்லை. எனவே நிலாவுக்கு பயணிகளை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த முடிவெடுத்துள்ளனர்.

 

இப்போது அதை நிறைவேற்றும் கட்டத்துக்கு வந்திருக்கிறார்கள். ‘கோல்டன் ஸ்பைக்’ என்ற நிறுவனம்தான் நிலாவுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் கெர்ரி கிரிப்பின். இவர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அதனால் இவர் தரும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருக்கிறது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த சுமார் ரூ.38 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்ய வேண்டி வரும். நிலாவுக்கு உல்லாசப்பயணம் சென்றுவர இரண்டு நபர்களுக்கு கட்டணமாக ஒன்றரை பில்லியன் டாலர், அதாவது சுமார் ரூ.8 ஆயிரத்து 250 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டணத்தை செலுத்தி விட்டால் இரண்டு நபர்கள் நிலாவுக்கு உல்லாசப் பயணம் சென்று இரண்டு நாட்கள் தங்கி வரலாம். எத்தனை பேர் இந்தப் பயணத்துக்கு முன்வருகிறார்களோ அதன் அடிப்படையில் கட்டணத்தில் சற்று கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். இந்தப் பயணத்தின்போது, விண்ணில் உருவாக்கப்பட்டுள்ள மிதக்கும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக நாசா உருவாக்கி வரும் ராக்கெட்டுகள், விண்கலங்கள் பயன்படுத்தப்படும்.

“நிலாவுக்கு வணிக நோக்கில், அதுவும் நியாயமான கட்டணத்தில் நம்பத்தகுந்த விதத்தில் சுற்றுலாப்பயணம் ஏற்பாடு செய்வதுதான் எங்கள் நோக்கம்’’ என்கிறார் கிரிப்பின்.

நிலாவுக்கு முதல் உல்லாசப்பயணம் 2020-ம் ஆண்டு மேற்கொள்ளப்படுகிறது. நிலாவுக்கு ஒரு முறை உல்லாசப்பயணம் சென்று வந்து விட்டால், அதன்பின்னர் பயணக் கட்டணம் வெகுவாகக் குறையவும் வாய்ப்பு உள்ளது என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் நாமெல்லாம் போகும் அளவிற்கு என்றுமே கட்டணம் குறையப் போவதில்லை. அதனால் நிலவு பற்றிய நம் அழகான சினிமா பாடல்களைப் பாடிக்கொண்டு பூமியில் இருந்தே நிலவை தரிசிக்கலாம்