எதிர்க்கட்சித் தலைமை தரமுடியாது – துமிந்த

எதிர்க்கட்சித் தலைமை தரமுடியாது – துமிந்த

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை  நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட எதிர்த்தரப்பு எந்தக் கட்சி என்பது தொடர்பில் சபாநாயகர் தீர்மானித்து எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பில் அறிவிப்பார் எனவும் அதுதொடர்பிலான பூரணமான அதிகாரம் அவருக்கே இருப்பதாகவும் பதில் பொதுச்செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பில் குழப்பம் நீடிக்கும் நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை(01) நாடாளுமன்றம் கூடிய பின்னர் முடிவு தெரியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

(riz)