கள்ளக் காதலியையும் 5 வயது மகளையும் கொலை செய்து ஆற்றில் போட்டவர் கைது

கள்ளக் காதலியையும் 5 வயது மகளையும் கொலை செய்து ஆற்றில் போட்டவர் கைது

தனது கள்ளக் காதலி மற்றும் கள்ளக் காதலியின் 5 வயது மகளை கொலை செய்து அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி ஆற்றுக்குள்போட முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வங்கி ஒன்றின் முகாமையாளராக பணியாற்றும் திருமணமாகி 2 குழந்தைகளின் தந்தையான சமரேஷ் என்பவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் பகுதியில் வசித்து வந்த சமரேஷ் என்பவருக்கும், அதே பகுதியில் 5 வயது மகள் தீபஞ்சனாவுடன் வசித்து வந்த சுசிதா சக்ரபர்த்தி(34) என்பவருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சமரேஷ் நேற்று தனது கள்ளக் காதலி சுசிதாவின் வீட்டிற்கு சென்று திருமணம் தொடர்பாக பேசியபோது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சமரேஷ் தனது கள்ளக் காதலியையும், 5 வயது மகளையும் கொலை செய்து அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி 3 பைகளில் போட்டு அவற்றை ஹூக்ளி ஆற்றில் போட சென்றுள்ளார்.

படகில் மூன்று பைகளுடன் ஏறிய அவர் ஒரு பையை ஆற்றில் போட்டார்.

மீதமுள்ள 2 பைகளை ஆற்றில் போடும் முன்பு படகில் இருந்த சக பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை பிடித்து வைத்து பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

பொலிசார் வந்து பையை திறந்து பார்த்தபோது அவற்றில் ஒரு பெண் மற்றும் சிறுமியின் உடல் துண்டு, துண்டாக இருந்தது.

மேலும் ஆற்றில் வீசப்பட்ட பையையும் பொலிசார் மீட்டனர். பின்னர் சமரேஷை பொலிசார் கைது செய்தனர்