கொரோனா வைரஸ் – உலகம் முழுவதும் 1354 பேர் பாதிப்பு

கொரோனா வைரஸ் – உலகம் முழுவதும் 1354 பேர் பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – உயிர்களை காவுக் கொண்டுவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு, இதுவரை உலகம் முழுவதும் 1354 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை தவிர்த்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, அவுஸ்ரேலியா, நேபாளம், வியட்நாம், ஹொங்கொங், மாகூகு, மலேசியா போன்ற நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், ஹொங்கொங்கை சேர்ந்த ஐவர், மாகூகுவை சேர்ந்த இருவர், தாய்வானை சேர்ந்த மூவர், ஜப்பானை சேர்ந்த இருவர், தாய்லாந்தை சேர்ந்த ஐவர், தென்கொரியாவை சேர்ந்த இருவர், அமெரிக்காவை சேர்ந்த இருவர், அவுஸ்ரேலியாவை சேர்ந்த ஒருவர், பிரான்ஸை சேர்ந்த மூவர், மலேசியாவை சேர்ந்த மூவர், சிங்கப்பூரை சேர்ந்த மூவர், நேபாளத்தை சேர்ந்த ஒருவர், வியாட்நாளை சேர்ந்த ஒருவர் அடங்குகின்றனர்.

உலகம் முழுவதும் மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலும் பலரும் இலக்காகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், இந்த கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உலகநாடுகள் தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது