ஐ.தே.க. வாய்பை சரியாக பயன்படுத்துமா? சஜித்தின் கரங்கள் பலப்படுத்தப்படுமா?

ஐ.தே.க. வாய்பை சரியாக பயன்படுத்துமா? சஜித்தின் கரங்கள் பலப்படுத்தப்படுமா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு அரணாகவே ஐக்கிய தேசியக்கட்சியை கருதுகின்றனர்.

இதுமட்டுமன்றி சிறுபான்மையின மக்கள் சஜித்தை சிறந்த தலைவராக ஏற்றுள்ளனர். இதற்கு சிறந்த சான்றாக கடந்த ஜனாதிபதி தேர்தல் இருகின்றது.

மேலும், நேற்று முன்தினம்  விசேட அறிக்கை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

குறித்த அறிக்கையில் உள்ள விடயங்கள் சட்டமாக்கபடுமாக இருந்தால் இதில் சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படலாம்  சில அரசியல் விற்பன்னர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான காரணத்தினால் சிறுபான்மையினர் மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.காரணம் எதிர்கட்சியாக உள்ள முக்கியமான கட்சியாக ஐ.தே.க இருக்கிறது.

இவ்வாறான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துமாக இருந்தால் எதிர்காலத்தில் பலமான கட்சியாக ஐக்கிய தேசியக்கட்சி இருக்கமுடியும்.

இல்லாவிடின் பாரிய பின்னடைவை எதிர்நோக்க நேரிடலாம் என அரசியல் விற்பன்னர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சிக்குள் மோதல்கள் வெடிப்பது வழமையான நிகழ்வாக மாறிவிட்டது. அக்கட்சிக்கு அரசியல் ரீதியில் பின்னடைவு ஏற்படுவதற்கான பிரதான காரணங்களுள் இதுவும் ஒன்றாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதுகூட உட்கட்சி சண்டை சந்திவரை வந்த பின்னரே சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டது. தற்போதும் அதே நிலை நீடிக்கின்றது. இதனால் ஐ.தே.க. ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

சஜித் பிரேமதாஸவுக்கு கூட்டணியின் தலைவர் பதவியை வழங்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க பச்சைக்கொடி காட்டியிருந்தாலும், சின்னம் தொடர்பான பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.