பாவனைக்கு உதவாத மிளகாய் தூள் மீட்பு

பாவனைக்கு உதவாத மிளகாய் தூள் மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மிளகாய்தூள் உள்ளிட்ட பலசரக்கு பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் தரங்குறைந்த பாவனைக்கு உதவாத உற்பத்திகள் சந்தையில் விற்பனை செய்யும் செயற்பாடு அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மாத்தறை, கொழும்பு, கம்பஹா, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இரசாயன நிறங்கள் பயன்படுத்தி சோளம் மற்றும் தரங்குறைந்த மிளகுதூள்களை பயன்படுத்தி மிளகாய்தூள் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பெப்ரவரி மாதம் மாத்திரம் பாவனைக்கு உதவாத இரண்டாயிரம் கிலோ கிராம் மிளகாய் மற்றும் பலசரக்கு தூள்கள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது மீட்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலங்களில் இந்த நிலைமை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்க செயலாளர் பொது மக்களை கோரியுள்ளார்.