லசந்த விக்கிரமதுங்க வழக்கு – ஜனாதிபதிக்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

லசந்த விக்கிரமதுங்க வழக்கு – ஜனாதிபதிக்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போதைய ஜனாபதியாக பதவி வகிக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அவர் ஜனாதிபதியாக பதவி வகிக்காத சமயத்தில் அவருக்கெதிராக வழக்கு தொடர முடியுமென லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்கவிற்கு அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நீதிமன்றம் தற்போது கோத்தாபயவிற்கு எதிராக வழக்குத்தொடர முடியாது என தெரிவித்த தீர்ப்புக்கெதிராக அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்கிரமதுங்க தொடர்ந்த வழக்கு தொடர்பில் அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

தற்போது கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றமை பொறுப்புக்கூறலை தாமதப்படுத்துமே அன்றி தடுக்க முடியாது எனவும் அவரால் பாதிக்கப்பட்ட எம் போன்றவர்கள் நீதிக்காக போராடுவதை ஒருபோதும் கைவிடப்போவதில்லையென அஹிம்சா தெரிவித்துள்ளார்

லசந்த விக்கிரம கொலை தொடர்பில் இதுவரை இலங்கை அரசு ஏற்கவோ அல்லது மறுதலிக்கவோ இல்லையெனவும் அஹிம்சா விக்கிரமதுங்க இவ் வழக்கை மீண்டும் தொடர முடியும் என்பது குறித்து நாங்கள் திருப்தி அடைகிறோம் எனவும் இவ் வழக்கில் வாதாடிய நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மையத்தின் சட்டப் பணிப்பாளர் காமென் செயுங் தெரிவித்துள்ளார்