மாயாதுன்னவின் இராஜினாமாக் கடிதம் தேர்தல் செயலகத்திற்கு கிடைக்கவில்லை

மாயாதுன்னவின் இராஜினாமாக் கடிதம் தேர்தல் செயலகத்திற்கு கிடைக்கவில்லை

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த சரத்சந்திர மாயாதுன்னவின் இராஜினாமாக் கடிதம் இதுவரை தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இவர் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் தேசியப் பட்டியலில் இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சரத்சந்திர மாயாதுன்ன மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய போதும் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துகொண்டார்.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியால் பிமல் ரத்னாயக்கவை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்துகொண்டால் அது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் கடிதம் மூலம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டும்.
இதனையடுத்து நீக்கப்பட்ட உறுப்பினர் பதவிக்கு மற்றொருவரை பரிந்துரை செய்யுமாறு சம்பந்தப்பட்ட கட்சிக்கு தேர்தல் ஆணையாளர் தெரியப்படுத்துவார்.

பின்னர் பரிந்துரைக்கப்படும் நபரை தேர்தல்கள் ஆணையாளர் ஏற்றுக் கொண்ட பின்னர் மற்றைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)