எந்த சமயத்தை சேர்ந்தவர்களாயின் 24 மணித்தியாலத்துக்குள் தகனம் செய்யப்பட வேண்டும்

எந்த சமயத்தை சேர்ந்தவர்களாயின் 24 மணித்தியாலத்துக்குள் தகனம் செய்யப்பட வேண்டும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா வைரஸினால் மரணமடைந்த ஒருவர் 24 மணித்தியாலத்துக்குள் தகனம் செய்யப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் நோயினால் ஒருவர் மரணமடைந்தால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய தர செயற்பாட்டு நடைமுறைகள் குறித்து சட்டம் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, நோயாளி ஒருவர் மருத்துவமனையில் மரணமடைந்தால் குறித்த நடைமுறைகளின் பிரகாரம் அவர்கள் எந்த சமயத்தை சேர்ந்தவர்களாயின் 24 மணித்தியாலத்துக்குள் தகனம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றன.

மரணம் தீவிர சிகிச்சைப் பிரி வில் அல்லது விசேட பிரிவில் சம்பவித்தால் பிரேத பரிசோதனை தேவைப்படாது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை இறந்தவர்களின் சடலங்கள் பொதியிடப்பட்டு நெருங்கிய உறுப்பினர்கள் சடலத்தை பார்ப்பதற்கு வரையறுக்கப்பட்ட காலமே வழங்கப்படும் எனவும் உறவினர்களுக்கு முககவசம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்வையிடுவதும் மருத்துவமனை வளாகத்தின் உட்புறத்தில் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்தவரின் முகம் மட்டுமே மூடப்பட்டிருக்காது. உடலை தொடுவதற்கு அனுமதி வழங்கப்படாது. அதன் பின்னர் சடலம் இறுதிகிரியை மேற்கொள்வோரிடம் கையளிக்கப்படும்.

இறந்தவரின் இல்லத்திலோ ஏனைய இடங்களில் இறுதி கிரிகைகளை மேற்கொள்வது நோய் பரவுவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேவேளை சீல் பண்ணிய பூதவுடல் தாங்கிய பேளை மலர்சாலையில் அல் லது இல்லத்தில் சமய கிரியைகளுக்காக மட் டும் வைக்க முடியும். அதேவேளை இறுதி கிரியைகளில் மக்கள் ஒன்றுகூட அனுமதிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட மருத்துவ அதிகாரிகளின் திணைக்களத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஆவணம் ஒன்றை எக்னோமிக் நெக்ஸ்ட் இணையத்தளம் பார்த்திருப்பதாக கூறுகின்றது.