இந்தியாவால் 10 தொன் மருந்து வகைகள் அன்பளிப்பு

இந்தியாவால் 10 தொன் மருந்து வகைகள் அன்பளிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய, கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியா, பத்து தொன் அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.

இந்த மருந்து வகைகள் இந்தியாவின் இரண்டு சிறப்பு விமானங்களில் நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்தியாவின் இந்த உதவிக்கு பிரதமர் மோதிக்கும் , இந்திய மக்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது நன்றியை தெரிவித்துளளார்.