கொடிய கொரோனா நோய் அனர்த்தத்திலும் கூட இந்தியாவின் அட்டூழியங்கள் குறையவில்லை

கொடிய கொரோனா நோய் அனர்த்தத்திலும் கூட இந்தியாவின் அட்டூழியங்கள் குறையவில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காஷ்மீர் நீண்ட காலமாக பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரு முறுகலாகவே இருந்து வருகிறது. இந்த உண்மை உலக தலைமை நாடுகள் அனைத்தும் அறிந்த விடயமே. ஆனாலும் , இது பற்றிய உலக தலைமைகளின் பார்வைகள் மற்றும் கலந்துரையாடல் முயற்சிகள் மிகவும் அரிதாகவே இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய தலைவர்களின் இந்த அக்கறையின்மை இந்தியாவின் மேலாதிக்கத்தை மேலும் வலுப்படுத்தச் செய்கிறது . இதனால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் அமைதியை நேசிக்கும் காஷ்மீரின் அப்பாவி மக்கள் மற்றும் எல்லைக்கு அருகில் வசிக்கும் பாகிஸ்தான் குடிமக்கள் ஆவார்கள்.ஆயிரக்கணக்கான யுத்த நிறுத்த மீறல்கள் மற்றும் கட்டுப்பாட்டு மீறல்கள் இந்தியாவின் போர்க்குணமிக்கவர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளன. இந்தியாவின் சித்தாந்தமே மேலாதிக்கம் ஆகும் . இந்த சித்தாந்தத்தை செயல்படுத்துவதற்கான முக்கிய கருவிகளாக இந்தியா அடக்குமுறை மற்றும் அட்டூழியம் ஆகியவற்றை பயன்படுத்துகிறது. இஸ்லாமிய நம்பிக்கையை பெரும்பான்மையாகக் கொண்ட காஷ்மீர் மக்களுடன் பாஜக தலைமை அனைத்து வரம்புகளையும் தாண்டி செயற்படுகிறது.

புது தில்லி ஹிமாலயன் பிராந்தியத்தின் சுயாட்சியை வாபஸ் பெற்றதோடு, கடந்த ஆகஸ்டில் கூட்டாட்சி நிர்வாக பிரதேசங்களாகப் பிரித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. தீர்மானங்களை தனது பலத்தின் மூலம் அவமதித்து , அரசியலமைப்பில் தன்னிச்சையான திருத்தங்களைச் செய்து 370 மற்றும் 35 வது பிரிவுகளை ரத்து செய்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறப்பு அந்தஸ்தை வழங்கியதால் காஷ்மீரில் பதற்றம் அதிகரித்தது.

ஏகாதிபத்தியம் மற்றும் ஏமாற்றங்களில் மூழ்கியிருக்கும் இந்த அரசியலமைப்பற்ற நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்திய அதிகாரிகள் காஷ்மீரில் பயங்கரவாத ஆட்சியைக் கட்டவிழ்த்துவிட்டனர், ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் மற்றும் பொது பாதுகாப்புச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களை கடுமையாகவும் மிருகத்தனமாகவும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தினர். கைது செய்யப்பட்ட எந்த காஷ்மீரியையும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் இரண்டு வருடங்கள் தடுத்து வைக்கும் அளவிற்கு கூட செல்லக்கூடிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரில் கண்டெடுக்கப்பட்ட எண்ணிலடங்கா புதைகுழிகள், 700,000 இற்கும் அதிகமான வழக்கமான மற்றும் 40,000 இற்கும் அதிகமான துணை இந்திய இராணுவ துருப்புக்கள் காஷ்மீர்களை மிருகத்தனமாக நடத்தியதற்கான தெளிவான அத்தாட்சிகளாகும். கும்பல் பாலியல் பலாத்கார தொடர்ச்சியான நிகழ்வுகள், இந்திய துருப்புக்களின் மிருகத்தனத்தை மேலும் அம்பலப்படுத்துகின்றன.

துரதிர்ஷ்டவசமாக, கொடிய கொரோனா வைரஸ் அனர்தத்தைத் தொடர்ந்து உலகளாவிய தலைவர்கள் தமது கடும்போக்கு அணுகுமுறைகளை மிகவும் மென்மையாக்கிய போதிலும், காஷ்மீரில் இப்பாரிய மனித உரிமை மீறல்கள் அனைத்தும் இன்றுவரை தொடர்கின்றன. இந்த கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த கட்டாய பூட்டுதல்களை (லோக்டவுன்) முழு உலகமும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் காஷ்மீரில், கொரோனா அனர்த்தம் இல்லாத காலங்களிலிருந்து பூட்டுதல்கள் (லோக்டவுன்) மற்றும் ஊரடங்கு உத்தரவுகள் அரை வருடத்திற்கும் மேலாக நடைமுறையில் உள்ளன.

கொரோனா அனர்த்தத்தினால் முழு உலகமும் மென்மையான அணுகுமுறைகளை கைக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இந்திய அரசாங்கமோ, மனிதாபிமானம் ஒருபுறம் இருக்க, பின்வாங்குவதற்கான அல்லது மனந்திரும்புதளுக்கான அறிகுறிகளைக் கூட காட்டத் தவறி இருக்கிறது. சாதாரண காஷ்மீரிகளையும் அவர்களின் உயர்மட்ட தலைவர்களையும் தடுத்து வைத்திருப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. இளைஞர்கள் தங்கள் வீடுகளிலிருந்து கடத்திச் செல்லப்படுகிறார்கள், அவர்கள் இருக்கும் இடம் வெளியிடப்படுவதுமில்லை. அவர்களில் சிலர் பாதுகாப்பு படையினரால் போலி குற்றச்சாட்டின் பேரில் கொலை செய்யப்படுகிறார்கள்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தகவல் தொடர்பு முடக்கத்தை இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இது உலகின், ஒரு ஜனநாயக நாட்டில் மிக நீண்டகால இணைய முடக்கம் என அறியப்படுகிறது. இணையத்தை முடக்குதல் மற்றுமல்லாது, லேண்ட்லைன் மற்றும் மொபைல் இணைப்புகளையும் இந்திய அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.

சில தகவல்களின்படி, 10,000 க்கும் மேற்பட்ட இளம் காஷ்மீரிகள் கைது செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். கும்பல் கற்பழிப்புத் தகவலும் இதற்கு சமமாக கொடூரமானது. இதுபோன்ற கொடூரமான நடவடிக்கைகளின் போது 8 வயது சிறுமியிலிருந்து 80 வயது பெண் வரை கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் , அடையாளம் தெரியாத காஷ்மீரிகளின் 6,000 புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று காஷ்மீரில் இருந்து வெளிவரும் உண்மையான அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இது ஆசியாவின் மிகப்பெரிய ஜனநாயகத்தை ஆதரிப்பதாகக் கூறும் இந்தியாவின் மதச்சார்பின்மையின் முகத்தில் விடப்பட்ட ஒரு பாரிய அறையாகும். இந்த மோசமான சூழ்நிலையை இன்னும் மோசமாக்கியதாக , ஐ.நா. தீர்மானங்கள் மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ஏ.என்.சி) போன்ற உலகின் மனித உரிமை அமைப்புகளைத் தவிர்த்து சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், மலேசியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் எதிர்ப்புக்கள் இருந்தபோதிலும் காஷ்மீரிகளுக்கு நிவாரணம் வழங்க இந்தியா மறுத்துவிட்டது.

சட்டவிரோத தடுப்புக்காவல்களைப் பொறுத்தவரை, தன்னிச்சையான காணாமல் போனவர்களுக்கு எதிரான ஆசிய கூட்டமைப்பு இதுபோன்ற கொடூரமான நிகழ்வுகளுக்கு விதிவிலக்காக உள்ளது.கூட்டமைப்பின் தலைவர் குர்ரம் பர்வேஸ், மத்திய கிழக்கு தலைமையுடன் பேசும்போது, “காஷ்மீரி கைதிகளில் பெரும்பாலோர் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் அரசியல் கைதிகள் மற்றும் அவர்களின் அரசியல் கருத்துக்களுக்காக முற்றிலும் வேட்டையாடப்படுகிறார்கள். தண்டனை பெற்ற குற்றவாளிகள் உட்பட பிற கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் காஷ்மீரிகளுக்கு வழங்கப்படாமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை” என குறிப்பிட்டார்.

ஸ்ரீநகர் நகரில் தனது இரண்டு மகள்களுடன் வசிக்கும் நுஜாத் ஷாஹித், திஹார் சிறையில் உள்ள தனது கணவர் ஷாஹித்-உல்-இஸ்லாத்தின் நிலை தனது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை மோசமாக பாதித்துள்ளது என்று கூறுகிறார்.

தற்போது, ஜம்மு-காஷ்மீரின் 13.5 மில்லியன் மக்களில் 68.3 சதவீதமானவர்கள் முஸ்லிம்கள். பாஜக தனது அதிகாரத்தை ஒரு ஆளும் கட்சியாகப் பயன்படுத்தி பிராந்தியத்தின் மக்களை முடிவில்லாமல் அடக்கி இந்தியாவின் பிற பகுதிகளுக்கு இது எவ்வளவு வலிமையானது மற்றும் தீர்க்கமானது என்பதை நிரூபிக்க முடியும்.

இதைவிட வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த விவகாரத்திற்கு உடனடி தீர்வு இல்லை என்பதாகும். காஷ்மீரின் அமைதி மற்றும் வெகுஜன எதிர்ப்பு ஆகியவற்றின் மீதான இந்திய அதிகாரிகளின் ஆவேசம் என்பது ஒரே ஒரு விடயத்தில் வெளிப்படுகிறது , அது அதன் கண்ணுக்குத் புலப்படுகின்ற மற்றும் புலப்படாத வடிவங்களிலாலான ‘நீடித்த முற்றுகை’ ஆகும்.

இது பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கு சங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது. இப்பகுதியில் வாழும் ஒவ்வொரு நபரும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போலவே இருக்கிறார்கள். மேலும், காஷ்மீரில் உள்ள மக்களுக்கு அதைத் தாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று இராஜதந்திரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மறுபுறம், அரசாங்க செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் உறுதிப்படுத்தியமைக்கு அமைய, பல கொரோனா வைரஸ் தோற்றாளிகள் மற்றும் நோய் காரணமாக சில மரணங்கள் நிகழ்ந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரில் தொடர்ச்சியான கட்டுப்பாடுகள் குறித்து பாகிஸ்தான் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் நடைமுறையில் உள்ள சுகாதார முறைமை மிகவும் பரிதாபகரமானது. ஸ்ரீநகரின் ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையின் மருத்துவர் அஹ்மத் கூறுகையில், “எங்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் வேலை முடிந்து வீட்டிற்குச் செல்வதற்கு மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள். நாங்கள் ஒரு அறுவை சிகிச்சை முகமூடி, சாதாரண கையுறைகள் மற்றும் அறுவை சிகிச்சை கவுன் மற்றும் ஒரு தொப்பியை மட்டுமே அணிகிறோம் .” என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியைத் தணிக்க, பிராந்தியத்தில் அதிவேக இணையதளம் மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவதில் உடனடியான தலையீடு கோரி காஷ்மீர் அறிஞர்கள் ஆலோசனை மற்றும் அதிரடி வலையமைப்பு, ஒரு இடைநிலைக் குழு ஆகியவை உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“காஷ்மீரிகள் மீதான இந்திய அரசின் அலட்சியம் வெளிப்படையான குற்றமாகவும், அது உண்மையில் ஒரு இனப்படுகொலை என்றும் கருதப்படுகிறது ” என்று ஒரு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. “மேலும், ஜம்மு-காஷ்மீருக்கான நுழைவாயிலில் கொரோனா நோய் பரிசோதனையை தவிர்ப்பதன் மூலமும், போதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் தயாரிப்புக்கள் இல்லாமல் குடிமக்களைப் தனிமைப்படுத்துவதன் மூலமும்

இந்திய அரசு நிலைமையை மோசமாக்குகிறது.” என்று அவ்வமைப்பு மேலும் தனது கவலையை தெரிவித்துள்ளது.

 

மூலம் : சைஃபுர் ரஹ்மான்