பாயல் கோஷ்க்கும் கொரோனாவா

பாயல் கோஷ்க்கும் கொரோனாவா

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) -தெலுங்கு திரையுலகில் அறிமுகமான நடிகை பாயல் கோஷ், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த லாக்டவுன் நேரத்தில் மலேரியாவால் பாதிக்கப்பட்ட பாயல் கோஷ், அதன் பாதிப்புகளால் மனதளவில் உடைந்து போனதாகவும், தற்போது முழுவதுமாக அதில் இருந்து மீண்டுள்ளதாகவும் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். நல்ல வேளை கொரோனா பாதிப்பு இல்லை என்பது பெரிய நிவாரணமாக இருந்தது எனக்கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனதால், ரொம்பவே அச்சப்பட்டேன். பின்னர், தனக்கு மலேரியா என்று தெரிந்ததும், கவலை இல்லாமல், அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இந்த ஊரடங்கால் கிடைத்துள்ள இந்த நேரத்தை உலக சினிமா பார்ப்பதிலும், புத்தகங்கள் வாசிப்பதிலும் செலவிட்டு வருகிறேன் என பயல் கோஷ் கூறியுள்ளார்.