பொசன் தினத்திற்குப் பின் ஊரடங்கு சட்டம் மீளப் பெறப்படும் சாத்தியம்

பொசன் தினத்திற்குப் பின் ஊரடங்கு சட்டம் மீளப் பெறப்படும் சாத்தியம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, எதிர்வரும் நாட்களில் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தால் இந்த முடிவை நடைமுறைபடுத்தவும் அரச உயர்பீடம் எண்ணியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி எதிர்வரும் பொசன் தினத்திற்குப் பின் பெரும்பாலும் ஊரடங்கு சட்டம் மீளப் பெறப்படலாம் என்றும் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இதுவரை இலங்கையில் 1620 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் 801 பேர் பூரண சுகம் பெற்று வீடு திரும்பியுள்ளதோடு 10 உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.