மார்ஷல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை

மார்ஷல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊவா மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மார்ஷல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(01) இறுதி மரியாதை செலுத்தினார்.

பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பு ஜயரத்ன மலர்ச்சாலைக்கு சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், நினைவுப் புத்தகத்தில் அனுதாபச் செய்தியொன்றையும் பதிவு செய்தார்.