மேலும் 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மேலும் 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1643 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 821 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதோடு, 811 பேர் பூரண குணமடைந்துள்ளனர். மேலும் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.