இந்திய ஊடகங்கள் தீவிர தேசபக்தி என்ற போர்வையில் , ஆக்கிரமிப்பு மற்றும்  அடக்குமுறைமிக்க  வெளியுறவுக் கொள்கையை  (பேரினவாதத்தைத்)  தூண்டுகின்றன

இந்திய ஊடகங்கள் தீவிர தேசபக்தி என்ற போர்வையில் , ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறைமிக்க வெளியுறவுக் கொள்கையை (பேரினவாதத்தைத்) தூண்டுகின்றன

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊடகம் என்பது ஒரு நாட்டின் நான்காவது தூண் என்று அழைக்கப்படுகின்றகமைக்கமைய, மற்ற மூன்று தூண்களைப் போலவே, ஊடகமும் உண்மையை அலசி அறிந்து சமநிலைதன்மையை பேண வேண்டும் என்பதும் , ஒருபோதும் ஒருதலைப்பட்சமாக செயற்படக்கூடாது என்பதும் பொதுவான ஊடக தர்மமாகும்.

எனவே ,அரசாங்கம் மற்றும் செல்வாக்குமிக்க நபர்கள் மீதான ஊடகங்கள் கொண்டிருக்கும் சமநிலைத்தன்மை கொண்ட அலசி ஆராயும் பார்வை தான் ஊடகங்களை அரசாங்கத்திற்கு விரோதமான ஒரு நிறுவனமாக தோற்றமளிக்கச் செய்கின்றது.

ஆனால், ஊடகங்களின் இது போன்ற செயற்பாடானது, சமூக-அரசியல் சமநிலையை நிலைநிறுத்த உதவுவதோடு , அவற்றின் முன்னேற்றம் மற்றும் திறன் மேம்பாட்டிற்காக தற்போதைய அமைப்புகளில் உள்ள பலவீனங்களையும் ,ஓட்டைகளையும் அடையாளம் காணவும் வழியமைக்கிறது.

ஆனால்,பெரும்பாலான இந்திய ஊடகங்கள், ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட வேண்டிய பொதுவான விடயங்களைக் கூட வெளியிடாமல், மாநில உறுப்புகளின் (ஒருங்கிணைந்த பகுதி) போல, பல ஆண்டுகளாக ஒன்றாக செயல்படுவது விந்தையானதல்லவா?

உதாரணமாக, இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றிய இந்தியாவின் பல்வேறு மிருகத்தனமான மற்றும் மனிதாபிமானமற்ற கொள்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள், கட்டாய இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறை ஆகியவை ( மிகச் சிலவற்றில் ஒன்று) ஒப்பீட்டளவில் இன்றைய நாகரீக உலகில் இந்தியாவின் மனிதாபிமானமற்ற கொள்கைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அப்பாவி காஷ்மீர் மக்கள் மீது குறிப்பாக சுயநிர்ணய உரிமை கோருவோர் மீது படுமோசமான தண்டனைகளும் ,அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.கும்பல் கற்பழிப்பு, எண்ணிலடங்கா கொலைகள் , PSA மற்றும் AFSPA போன்ற நீதிபதிகளின் அதிகாரங்களை படையினருக்கு வழங்கும் கறுப்புச் சட்டங்கள்,ஊரடங்கு உத்தரவு, முற்றுகை போன்ற எண்ணிலடங்கா கொடூரங்கள் அங்கே இடம் பெறுகின்றன.
இந்த கொடூரங்கள் பல தசாப்தங்களாக அங்கே தொடர்கின்றன, ஆனால் ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களும் இந்த கொடுமைகளை உலகுக்கு அம்பலப்படுத்தத் தவறிவிட்டன.

இது அப்படியிருக்க , எரியும் நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றுவது போல் , அண்மைக்காலமாக சில இந்திய ஊடகங்கள் , கில்கிட்-பால்டிஸ்தான் , முசாபராபாத் மற்றும் மிர்பூர் ஆகிய இடங்களின் வானிலை அறிக்கையை வழக்கமாக தமது ஊடகங்களில் இந்திய வானிலை அறிக்கையாக வெளியிடுவதன் மூலம் இந்திய அரசாங்கத்தின் கைக்கூலிகளாக செயற்படுவதை வெளிப்படையாக நிரூபித்துள்ளன.

POK (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) மற்றும் “இந்தியாவின் GB (கில்கிட்-பால்டிஸ்தான்) ” போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுவதன் மூலம் இந்தியாவின் உள் நோக்கமும், அதன் பேரினவாத தலைமையின் திட்டங்களும் மற்றும் அதன் அடித்தளமும் தெள்ளத்தெளிவாக வெளிப்படுகின்றது.

சில காலமாக இவ்வாறான ஊடகங்கள் மூலமாக நடைபெறும் மறைமுகமான யுத்தங்கள், அமைதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இப் பிராந்தியத்திற்கான பாரிய தடையாகவே காணப்படுகிறது.

எனவே , ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களும் சமாதானத்தை விரும்பாதவர்களின் கைக்கூலிகளாகவே உள்ளன என்பதை இந்திய ஊடகங்களின் இச்செயற்பாடுகள் படம் பிடித்துக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம் : மியான் சைபூர் ரெஹ்மான்