மேலும் மூவருக்கு தொற்று, 35 பேர் பூரண குணம்

மேலும் மூவருக்கு தொற்று, 35 பேர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 35 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1287 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 1887 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 589 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.