மிருகக்காட்சி சாலைகள் இன்று முதல் திறப்பு

மிருகக்காட்சி சாலைகள் இன்று முதல் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பூங்காக்கள், சரணாலயங்கள், மிருகக்காட்சி சாலைகள் உள்ளூர்   மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காக, எதிர்வரும் இன்று (15) முதல்  மீளத் திறக்கப்படவுள்ளதாக, வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவல் காரணமாக, தேசிய பூங்காக்களும் தாவரவியல் பூங்காக்களும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்தேசிய பூங்காக்கள் மூடப்பட்டதை தொடர்ந்து,  திறைசேரிக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதோடு, இவற்றின் வருடாந்த வருமானம் 7,000 மில்லியனாகும் எனவும், அவர் தெரிவித்தார்.