இதுவரை 785 கடற்படையினர் குணமடைந்தனர்

இதுவரை 785 கடற்படையினர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 12 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 785 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1498 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.